பப்பரப்புளிமரமும் பொன்னிக்குருவியும். 2
இப்போது எழுபதை தாண்டிவிட்ட மரைக்காயரின் வாழ்க்கை ஓய்வு வாழ்க்கைதான். அவருக்கு ஆசாரத்து திண்ணையும் குளத்துமேட்டு புளியமரத்து காற்றும்தான் அவரின் முழுநாள் துணை. முன்புபோல் சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கவோ, குளத்தின் மறுகரையில் இருக்கும் குளங்கரை அப்பா பள்ளியில் போய் தொழவோ முடிவதில்லை.
வீட்டிலேயே எல்லா தொழுகையும் நடக்கும் . ஜும்மா தொழுகைக்கு மட்டும் பொட்டு வண்டியில் ஜும்மா பள்ளிக்கு போவார். சுப்பரமணி வண்டி ஒட்டிக்கொண்டுவருவான். உயரமும் நிறமும் கொண்ட மரைக்காயர் ,. அபுல் கலாம் ஆசாத்தின் காங்கிரஸ் கொள்கைகளில் ஆர்வம்கொண்டோ என்னவோ,அவரைபோன்றே சிறிய தாடியும் மீசையும் , உயரமான தொப்பியும் நீண்ட கோட்டுமாக அவர் கம்பீரமான ஜும்மாவுக்கு செல்லும் ஆழகு தனி. கையில் ஒரு நடைக்கம்பும் இருக்கும் . ஜும்மா பள்ளிக்கு செல்லும் வழியில் ஜும்மாவுக்கு போய்க்கொண்டிருக்கும் பேரப்பிள்ளைகள் நவாஸ், நூஹு இருவரையும் வந்து வண்டியில் வரும்படி அழைப்பார் . அவர்களுக்கு வண்டியில் அவரோடு போவதற்கு கூச்சமாக இருக்கும். மேலும் கூட்டாளிகள் கேளிசெய்வர்கள் என்று கவலை. முதலில் நடந்துவர்றோம் கண்ணுவாப்பா என்பார்கள். ஏறுங்கடா என்று சத்தம்போட்டதும் பயந்து ஏறிவிடுவார்கள் . அத்தோடு முடிந்துவிடுவதல்ல அந்த அதாபு(தொந்தரவு). அந்த பழமையான சீதக்காதி கட்டிய ஜும்மா பள்ளியில் ஊரில் உள்ள அத்தனை பேரும் அங்கு ஒன்றாக ஜும்மா தொழுவார்கள். அது ஊரின் ஒற்றுமைக்கான நடைமுறையாக பின்பற்றப்பட்டது . இன்று மக்கள்தொகை பெருகிவிட்ட பிறகு பல பள்ளிகளில் ஜும்மா நடக்கிறது. ராமேஸ்வரம் கோயில் சேதுபதி மன்னரால் கட்டிய அதே காலகட்டத்தில், அவருக்கு நண்பராய் இருந்த சீதக்காதி அதே கட்டிடதொழிலாளர்களைகொண்டு இந்த ஜும்மா பள்ளிவாசலை கட்டினார். அதனால் ஜும்மா பள்ளி ஒரு கோயில் பிரகாரம் போன்றே கற்களினால் சித்திரவேலைப்பாடுகளோடு இருக்கும். உருவங்கள் இருக்காது. பூவேலைப்பாடுகள் மட்டும் இருக்கும் .ஜும்மாபள்ளியிள்தான் சீதக்காதி அடங்கிய மன்னரையும் இருக்கிறது . அவர் கபுரில்(அடக்கஸ்தலம்) கட்டடமோ வேறு அலங்காரங்களோ அடையாளங்களோ இருக்ககூடாது என்று சீதக்காதி சொன்னதுபோல் இன்றும் வெறும் மண் தரையாகவே உள்ளது. ஜும்மா பள்ளிவந்ததும் எப்படியாவது கண்ணுவாப்பவை, தவிர்த்துவிட்டு நண்பர்களோடு போவதற்காக வண்டியிலிருந்து இறங்கியதும் இடதுபக்கத்து ஹவுளை(பள்ளிவாசலில் உள்ள தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டி)நோக்கி ஒளு(தொழுகைக்கான சுத்தம் செய்தல்) செய்ய நடப்பார்கள். ஆனால் மரைக்காயர் டேய் என்னோடு வாங்கடா என்று அதட்டல்போட்டதும், ஆட்டுகுட்டிகள்போல் அவர்பின்னால் வலதுபக்க ஹவுளுக்கு ஒழுச்செய்ய போவார்கள். ஒளுச்செய்ததும் நண்பர்களோடு போய்விடலாம் என்றால் அதுவும் நடக்காது. மரைக்காயர் ஒழுசெய்து முடியும்வரை காத்திருந்து ,அவர்களையும் அழைத்துக்கொண்டு தொழுகையின் முதல் சப்பில்(வரிசை) இருப்பார்.அவர்களையும் அவருக்கு பக்கத்திலேயே இருக்கச்செய்வார்.இருவருக்கும் கட்டிப்போட்டதுபோல் இருக்கும் . விட்டால் பின் சப்களில் நண்பர்களோடு தொழுகை ஆரம்பிக்கும்வரை விளையாடிக்கொண்டு கும்மாளமாக இருக்கலாம்.
தொழுகை முடிந்ததும் அவரோடுதான் வண்டியில் திரும்பியும் வரவேண்டும். நவாசும், நூஹும் மரைக்காயரின் மகள் ஜெமிலா வயிற்று பேரன்கள். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். அதனால் கூட்டாளிகள் எல்லோரும் இருவருக்கும் பொதுவானவர்கள். கூட்டாளிகள் வண்டியில் உட்கார்ந்திருக்கும் இவர்கள் நிலையை கேளிசெய்துகொண்டு அவர்களுக்குள் விளையாடிக்கொண்டு வருவார்கள் .
நவாசிற்கு ரெம்ப பிடித்த கூட்டாளி ரசீதுதான். முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்து வருகிறார்கள். அரபி பள்ளியிலும் ஒன்றாக ஓதினார்கள். ரசீதின் வாப்பா கொழும்பில் மாணிக்க வியாபாரி. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார். ஊர்வரும்காலங்களில் ரசீது வெளிநாட்டு சாக்லேட்,மிட்டாய் கொண்டுவருவான். அது ஒரு இனிமையான காலமாக இருக்கும். அப்போது நைலான் துணி அறிமுகமான காலம். ரசீதிற்கு அவன் வாப்பா நைலான் சட்டை கொண்டுவந்திருந்தார் . அந்த சட்டை ஜோப்பில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நோட்டு வெளியே தெரிந்தது. வாட்டர் பூச்சி என்று தண்ணீரில் இட்டு புத்தகத்தில் ஒட்டக்கூடிய அழகிய படங்கள் அவன் வாப்பா கொண்டுவந்திருந்தார். சாக்லேட், மிட்டாய், வாட்டர் பூச்சி ஆகியவை நவாசிற்கு மட்டுமே கிடைக்கும். நூஹிர்கும் மற்ற நண்பர்களுக்கும் இதனால் அவர்கள்மேல் கோபமும் பொறாமையும் கொண்டு அவர்களை பற்றிய பிராதுகள் ஆசிரியரிடத்தும், ஆலிம்ஷாவிடமும் சொல்வார்கள். சார் ரெண்டுபேரும் பேசிக்கிட்டே இருக்காங்க, ஆலிம்ஷா ஓதாமல் சாப்பிட்டுக்கிட்டு இருக்குராங்கன்னு பிராதுகள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிலநேரங்களில் ஆசிரியர்களும் ஆலிம்ஷக்களும் அவர்களை இடத்தை மாற்றி பிரித்துவைப்பதுமுண்டு. ஆனால் மற்றநேரங்களில் அவர்கள் இணைபிரியாது இருப்பார்கள் . நவாசின் வாழ்கையில் முதல் கூட்டாளி என்றால் ரசீதுதான். அந்த நட்பு ஆரம்பப்பள்ளியிலிருந்து உயர்நிலை பள்ளியிலும் தொடர்ந்தது. உயர்நிலைப்பள்ளி மேலத்தெருவில், ஊரின் மற்றொரு ஓரத்தில் இருந்தது.சுமார் இரண்டு மெயில் தொலைவில் இருந்தது.நடந்துதான் போவார்கள்.வாகன வசதிகள் இல்லாத காலம். பகலைக்கு உணவு இடைவேளையில் அந்த ஒரு மணி இடைவெளியில் ,வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு வேகவேகமாக திரும்பி பள்ளிக்கு போகவேண்டும். ரசீது வரும்வழியில் இருக்கும் மீன் கடைத்தெருவில் மீன்வாங்குவான். அவன் பேரம்பேசி வாங்குவான்.கொக்குபிள்ளை பிள்ளை காக்கா கடையில்தான் அதிகம் வாங்குவான். காரணம் அவன் விலைகுறைவான சிறிய மீண்கள் அவரிடம்தான் இருக்கும் ,காக்க அந்த பெரிய கூத்துக்கு எவ்வளவு ? என்று பேரம் ஆரம்பிக்கும் , ரசிதின் பெரியகுடும்பத்திற்கு அந்த பெரிய கூறு போதுமானதுதான் .அந்த வயதில் குடும்பத்திற்கு தேவையான மீண்ணின் அளவை தீர்மானிப்பது அவன்தான் .உம்மா கொடுத்துவிட்ட ஒரு ரூபாயில் எப்படியும் அரையனா கமிசன் வைத்துவிடுவான். இந்த பழக்கம்தான் அவனின் வாழ்க்கையையே மாற்றிபோட்டது .கொக்குபிள்ளை காக்கா ‘ அது ஒன்னேகாருவா ,சின்னகூத்தவேங்கிட்டுபோ முக்கரூவாதே . வாங்கிட்டு போ” என்பார். சின்னகூறு பத்தாது பெரியகூரே முக்காருவாக்கி தாங்க காக்க சீதேவி என்பான். சீதேவி என்ற வார்த்தை அவரை சிறிது கரைத்திருக்கும்.மேலும் அவன் தினமும் அவரிடமே மீண் வாங்கும் வழக்கம் இருப்பதால் அவனுக்கு சலுகை உண்டு. சரி ஒரு ருவா குடுத்துட்டு வேங்கிட்டுபோ என்பார். உம்மா திட்டுவாங்க. முக்காருவாக்கிதாங்க என்பான். சிறிதுநேரம் பதில் சொல்லாமல் வேறு வியாபாரத்தை கவணிப்பார். ரசீதுக்கு நேரம் ஓடிக்கொண்டிருக்கும். உம்மா வீட்டில் மீணாக்க எல்லா கரச்சி வச்சி மீணுக்கு காத்திக்கிட்டிருபாங்க.வேகமா போவனும்.மீணாக்கி உண்டுட்டு ஸ்கூலுக்கு போவனும். ரெண்டுமணிக்கு ஸ்கூலிலே இல்லேனா வெள்ளகந்தசாமிசாறு கம்பாலே அடிகெடெக்கும்..அதுக்கு முன்னாடி மணியடிக்கிரதுக்குள்ள போவனும். இந்த பதைபதைப்பில் ஸ்கூலுக்கு போவணு காக்கான்னு கெஞ்சிக்கிட்டிருப்பான். அவன் கெஞ்சலுக்கு இறங்கி அரையணா காசை அவனிடம்தூக்கி எறிந்து, சரி சரி ஒருரூவாய தா என்பார். கொக்குபிள்ளை காக்கா உட்கார்திருப்பது ,ஒரு குட்டியானை உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கும். பெண்களின் மார்பு போன்ற அவரின் சட்டை போடாத உடம்பு ,சில குறும்புக்காரர்களின் கேலிக்கு ஆளாகும். காக்கா அந்த மேக்கூறு என்னவெல என்று இரட்டை அர்த்தத்தில் கேட்பார்கள். காக்காவுக்கு கோபம்வந்தால் கேட்டவார்தைக்கு பஞ்சமிருக்காது. கேலியை புரிந்துகொண்டு கெட்டவார்தையோடு போடா போயி ஒங்க ஆத்தாட்ட கேளும்பார்.
அவனுக்கு தேவை அந்த அரையணாதான். அதுகிடைத்த மகிழ்ச்சியில் ஒருருவாயை கொடுத்துட்டு பெரிய மீண்கூத்தை வாங்கிட்டு வருவான். நவாஸ் இதற்கிடையில் அவசரப்படுத்திக்கொண்டிருப்பான். அவனுக்கு வீட்டில் சோறு போட்டு உம்மா ரெடியா வச்சி காத்துக்கிட்டிருப்பாங்க. ஆனாலும் ரசீதை விட்டு விட்டு தனியாக போனதில்லை. இருவரும் வேகம்வேகமாக தெருவை அடையும்போது இடைவேளையில் 35 நிமிடங்கள் கழிந்திருக்கும்.
வீட்டில் நவாசின் உம்மா வாசலில் அவனுக்காக பார்த்துக்கொண்டிருப்பார் . ஏண்டா இவ்வளவு நேரம் ,சீக்கிரம் உண்டுட்டு போடா. நவாசிடம் பதில் வராது. ரசீதோடு மீண்கடைக்கு போனது உம்மாக்கு பிடிக்காதுன்னு தெரியும். அவசரம் அவசரமாக அள்ளிப்போட்டுட்டு ஸ்கூலுக்கு பரப்பான். இதற்கிடையில் உம்மாவின் ஆவலாதிகள் ஏதும் காதில் ஏறாது. ரசீதுப்பயலோட சேராதன்ன கேக்ராப்புல இல்லே .அவனோட சேந்தா வீனாத்த போவா என்பார் . மீதியிருக்கும் சில நிமிசத்துல ஸ்கூலுக்கு போயாகனும். தெருமுனையில் உம்மாவின் உபதேசத்தையும் மீறி ரசிதுக்காக காத்துக்கிட்டிருப்பான்.
ரசீதின் உம்மா ரெடியாக இருக்கும் கரைசலில் மீணை போட்டு ஆக்கிமுடிக்க ஐந்து நிமிடம்தான்.அவனும் அவசரமாக அள்ளிபோடுவான். தெருமுனையில் நவாஸ் காத்துக்கொண்டிருப்பான். வழக்கம்போல் நேரமாச்சி வா மணி அடிக்கிரதுக்குள்ளே போயிருவோம் என்று ஓட்டமும் நடையுமாக பள்ளியை நெருங்கும்போது மணி சத்தம் கேட்கும். சிலநாட்கள் இந்த பந்தயம் தோற்றுவிடும். அப்போது இருவருக்கும் வெள்ளகந்தசாமி சாரின் பிரம்புக்கு வேலை வந்துவிடும் . இந்த விஷயம் நவாசின் உம்மாவின் காதுக்குபோக அதிக நாள் செல்லவில்லை. உம்மாவும் மாற்று ஏற்பாடு செய்தார்.(தொடரும்)பப்பரப்புளிமரமும் பொன்னிக்குருவியும். 3
<script>
(function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');
ga('create', 'UA-101258467-1', 'auto');
ga('send', 'pageview');
</script>


Comments
Post a Comment