Posts

Showing posts from June, 2017

மனிதம்

Image
பப்பரப்புளிமரமும் பொன்னிக்குருவியும்.                                                 1 தமிழகம் முழுவதும் மழைபெய்யும் காலத்தில் இங்கு மழை பெய்யாது. டிசம்பர் கடைசியில்தான் சரியான மழைக்காலம் ஆரம்பிக்கும். சில பத்தாண்டு இடைவெளியில் பிரளயம் போன்ற பெருமழை புயலுடன் வரும் . அப்படி ஒருபுயல்தான் தனுஷ்கோடியை கடலுக்குள் கொண்டுபோனது .அதுபோன்ற பெரும் புயலும் மழையும்தான் அந்த டிசம்பரில் வந்தது. அது தனுஷ்கோடி புயலுக்கு ஒரு பத்து ஆண்டுகள் முன்பு. கல்குளம் மண்குளம் என்று இரண்டு குளங்கள் அடுத்தடுத்து இருக்கும். ஒருவாரம் விடாது பெய்த இந்த மழையில் இரண்டு குளங்களும் நிரம்பி, ஒருகுளமாகிவிட்டிருந்தது.கல்குளத்தின் பக்கசுவர்கள் படித்துறை எல்லாம் மூடி நிரம்பி விட்டது. நூர் முஹம்மது மரைக்காயரின் ஆசாரம் என்று சொல்லப்படும் வீட்டின் வாசல் படிக்கட்டுவரை தண்ணீர் வந்துவிட்டது. இருகுளங்களும்,நூர்முஹம்மது மரைக்காயரின் ஆசாரமும், குளங்களின் பின்னால் இருக்கும் மணல்மேடும் விளையாட்டுத்திடலும் , அதை ஒட்டிய வாலிபர் சங்கமும் எல்லாம் சேர்ந்து பொதுவில் குளத்துமேடு என்று அழைக்கப்பட்டது.குலத்துமேட்டின் பெரும்பகுதியை